Puriyavillai
Swetha Mohan
Puriyavillai 歌词
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
உனது ஞாபகம் மறையவில்லை அதை
மறைக்க என்னிடம் திறமை இல்லை
விழியில் பார்க்கிறேன் வானவில்லை
அதை விழுந்த காரணம் தின்றவில்லை
இதுபோல் இதுவரை ஆனதில்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
~ இசை ~
காலை எழுந்தவுடன்
என் கனவுகள் முடிவதில்லை
மாலை மறைந்தாலும்
பள்ளிக்கூடம் மறப்பதில்லை
தோழி துணியை விரும்பவில்லை
தோழன் நீயும் மாறவில்லை
பேச்சில் பழைய வேகம் இல்லை
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
~ இசை ~
சாரல் மழையினிலே
உடல் ஈரம் உணரவில்லை
சாலை மரங்களிலே
இன்று ஏனோ நிழல்கள் இல்லை
கால்கள் இரண்டும் தரையில் இல்லை
காலம் நேரம் மாறவில்லை
காற்றில் எதுவும் அசையவில்லை
காதல் போல கொடுமை இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை